பீல் பிராந்தியத்தில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சரக்கு வண்டிகளிலிலிருந்து பொருட்களை களவாடியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஆரம்பம் முதல் பொலிஸார் குறித்த சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
றொரன்டோ பெரும்பாக பகுதியில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு ஆட்களை சேர்ப்பதற்காக அவர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கும்பல் போதைப்பொருள் கட்டத்தல்களிலும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.