Home உலகம் சல்மான் ருஷ்டி மீதான கொடூர தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

சல்மான் ருஷ்டி மீதான கொடூர தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

by Jey

உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (வயது 75) மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் (ஆக.12 வெள்ளிக்கிழமை) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில், சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சல்மான் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய 24 வயதான ஹடி மடர் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், சல்மான் ருஷ்டி மீதான கொடூர தாக்குதலால் தானும், தன் மனைவியும் அதிர்ச்சியடைந்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி மீதான கொடூர தாக்குதல் குறித்து அறிந்த நானும் என் மனைவியும் மிகுந்த அதிர்ச்சியும், கவலையும் அடைந்தோம். சல்மான் ருஷ்டி உடல்நலம் பெற அனைத்து அமெரிக்க மக்களும், உலகம் முழுவதும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போம்’ என்றார்

related posts