காலிமுகத்திடல் போராட்டம் நின்று போனாலும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க தான் முன்னெடுத்து செல்லும் போராட்டத்தை நியாயம் கிடைக்கும் வரை கைவிடப் போவதில்லை என கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக புனித பாப்பரசர் பிரான்சிஸ் வழங்கிய சுமார் 4 கோடி ரூபாவை பகிர்ந்தளிப்பதற்காக கொழும்பு கொச்சிக்கடை புதிய அந்தோணியார் தேவலாயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே கர்தினால் இதனை கூறியுள்ளார்.
இந்த தாக்குதலின் பின்னணியில் அரசியல் சதித்திட்டத்தின் நிழல்கள் இருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக சாதமான நடவடிக்கைகளை எடுத்ததால் மாத்திரமே தற்போதைய ஜனாதிபதியை ஏற்றுக்கொள்வேன்.