ஜெர்மனிய அதிபர் ஒலாப் ஸ்லோச் கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
மொன்றயல், றொரன்டோ, ஸ்டிபென்வெலி மற்றும் நியூபவுன்ட்லாண்ட் ஆகிய நகரங்களுக்கு இவ்வாறு ஒலாப் விஜயம் செய்ய உள்ளார்.
ஜெர்மனிய அதிபரின் கனடா விஜயம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 21ம் திகதி முதல் 23ம் திகதி வரையில் இந்த ஒலாப் கனடாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜெர்மனிய அதிபர் ஒலாப் கனேடிய மற்றும் ஜெர்மனிய வர்த்தக பிரமுகர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார்.
கனடாவின் செயற்கை நுண்ணறிவு மையத்திற்கும் ஒலாப் விஜயம் செய்ய உள்ளார்.
ரஸ்யாவிடமிருந்து இயற்கை எரிவாயு பெற்றுக் கொள்ளும் குழாய் தொடர்பில் கனடா ஜெர்மனிக்கு ஆதரவளித்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பின்னணியில் ஜெர்மனிய அதிபர் இவ்வாறு விஜயம் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.