பிரான்ஸின் தென்மேற்கு பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பாரிய காட்டுத் தீ பரவி வருகிறது. இதுவரை 10,000 இற்கும் அதிகமான ஹெக்டேயர்கள் காடு தீக்கிரையாகியுள்ளன.
பிரான்ஸிற்கு ஆறு ஐரோப்பிய நாடுகள் முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எதிர்கொண்டுள்ள பாரிய காட்டுத் தீ பரவலை தடுப்பதற்காக இந்த உதவிகள் செய்யப்படவுள்ளது.
ரெஞ்சு தீயணைப்பு படையினர் பலத்த முயற்சியின் மத்தியில் தீயினை அணைக்க போராடி வருகின்றனர். இந்நிலையில், பிரான்ஸிற்கு உதவுவதற்காக ஆறு ஐரோப்பிய நாடுகள் முன்வந்துள்ளதாக ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஜெர்மனி மொத்தமாக 24 தீயணைப்பு வாகனங்களையும், 65 தீயணைப்பு படையினரையும் பிரான்சுக்கு அனுப்பி வைத்துள்ளது.
நேற்று நண்பகல் அவர்கள் பிரான்ஸிற்கு வந்தடைந்துள்ளனர். இந்த நிலையில் போலந்து நாடு 49 தீயணைப்பு வாகனங்களையும், 146 தீயணைப்பு வீரர்களையும் பிரான்ஸிக்கு அனுப்பி வைத்துள்ளது.
ஒஸ்ரியா முதல்கட்டமாக 14 தீயணைப்பு வாகனங்களையும், 73 தீயணைப்பு படை வீரர்களையும் அனுப்பி வைத்துள்ளது. ரொமேனியா நாட்டினால் 14 தீயணைப்பு படை வாகனங்களும், 77 தீயணைப்பு படை வீரர்களையும் அனுப்பி வைக்க உள்ளனர்.
அவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸிற்கு வந்தடைவார்கள். கிரீஸ் நாடு பிரான்ஸிற்கு தற்போது இரண்டு தீயணைப்பு விமானங்களை ( அனுப்பி வைத்துள்ளது.
அவ்விமானங்கள் கடமையில் ஈடுபட்டுள்ளது. இறுதியாக ஸ்வீடன் நாடு இரண்டு தீயணைப்பு விமானங்களை அனுப்புவதாக அறிவித்துள்ளது.