Home உலகம் மத்திய தரைக்கடல் பகுதியின் வான்வழி தாக்குதல்

மத்திய தரைக்கடல் பகுதியின் வான்வழி தாக்குதல்

by Jey

சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரால் பெண்கள், குழந்தைகள் உள்பட அந்நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனினும், போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், சிரியாவின் சனா செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், எதிரி நாடான இஸ்ரேல் வான்வழியே நடத்திய ஏவுகணை தாக்குதல் டமாஸ்கஸ் நகரில் சில பகுதிகளை இலக்காக கொண்டிருந்தது.

இதற்கு பெய்ரூட்டின் தென்கிழக்கு வான்வழி பகுதியை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது. இதேபோன்று, தெற்கு டார்டவுஸ் நகரின் சில பகுதிகளை இலக்காக கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய தரைக்கடல் பகுதியின் வான்வழி பயன்படுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதனை தொடர்ந்து, சிரிய வான்வழி பாதுகாப்பு அமைப்பு, அந்த தாக்குதல்களை எதிர்கொண்டு சில ஏவுகணைகளை வீழ்த்தியது. இதில், 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்து உள்ளனர். பொருட்களும் சேதமடைந்து உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது

related posts