Home உலகம் இரண்டு வயது சிறுமியின் வாயில் அரை மீற்றர் நீளமுள்ள பாம்பு

இரண்டு வயது சிறுமியின் வாயில் அரை மீற்றர் நீளமுள்ள பாம்பு

by Jey

துருக்கியின் கந்தர் கிராமத்தில் அரங்கேறியுள்ள அதிர்ச்சி சம்பவம், பாம்புடன் சண்டைப் போடும் 2 வயது சிறுமியைப் பார்த்து மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.ஆகஸ்டு 10ம் திகதி சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டுள்ளனர்.

அவர்கள் வந்து பார்த்தபோது, இரண்டு வயது சிறுமியின் வாயில் அரை மீற்றர் நீளமுள்ள பாம்பு ஒன்று கவ்வி இருந்ததைக் கண்டனர். மட்டுமின்றி சிறுமியின் கீழ் உதட்டில் பாம்பு தீண்டிய அடையாளமும் இருந்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக சிறுமியை மீட்டு அருகாமையில் உள்ள சிறார் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். உரிய சிகிச்சைக்கு பின்னர் சிறுமி காப்பாற்றப்பட்டதாகவும், தேறி வருவதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்மை தீண்டிய நாகத்தை சிறுமி கடித்து துப்பியதாகவே கூறப்படுகிறது. இதில் நாகம் இறந்துள்ளது. சிறுமி குறித்த நாகத்துடன் விளையாட்டில் மீடுபட்டிருந்த போது, அது சிறுமியின் கீழ் உதட்டை கவ்வியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சிறுமி, நாகத்தை திருப்பி கடித்துள்ளார் என்றே தெரிய வந்துள்ளது. சம்பவத்தின் போது சிறுமியின் தந்தை, அருகாமையிலேயே பணியில் ஈடுபட்டிருந்தார் எனக் கூறப்படுகிறது.

துருக்கியில் மொத்தம் 45 வகையான பாம்புகள் காணப்படுகிறது. இதில் 12 வகை பாம்புகள் கொடிய விஷம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

related posts