ஒன்றாரியோவில் வீட்டு வாடகைத் தொகை அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் கனடாவின் அனைத்து மாகாணங்களிலும் வீட்டு வாடகைத் தொகை உயர்வடைந்துள்ளது.
குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் ஒன்றாரியோ மாகாணங்களில் கூடுதல் அளவில் வீட்டு வாடகை அதிகரித்துள்ளது.
கடந்த ஜுலை மாதம் கூடுதல் அளவில் வீட்டு வாடகை அறவீடு செய்யப்பட்ட மாகாணங்களின் வரிசையில் பிரிட்டிஷ் கொலம்பியா முதலாம் இடத்தையும், ஒன்றாரியோ இரண்டாம் இடத்தையும் வகிக்கின்றன.
ஓராண்டு கால இடைவெளியில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 19 வீதமும், ஒன்றாரியோவில் 15.2 வீதமும் வாடகை அதிகரித்துள்ளது.
ஒன்றாரியோவில் சராசரி மாத வாடகையானது 2332 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.