கனடிய படையினருக்கு உதவியா ஆயிரம் கணக்கான ஆப்கானிஸ்தான் பிரஜைகள் நிர்க்கதி நிலையை அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த கனடிய படையினருக்கு பல்வேறு வழிகளில் இந்த ஆப்கான் பிரச்சனைகள் உதவியுள்ளனர்.
இவ்வாறு உதவிய ஆப்கான் பிரஜைகள் தலிபான்களின் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வரும் நிலையில் அவர்களை துரித கதியில் கனடாவிற்கு அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி ஓராண்டு பூர்த்தி ஆகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் பிரஜைகளை கனடாவிற்கு அழைத்து வருவதற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்.டி.பி. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.