ஒன்றாரியோ மாகாணத்தில் நகரங்களின் மேயர்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் என முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
றொரண்டோ ஒட்டோவா ஆகிய நகரங்களை போன்று ஏனைய மாநகர சபைகளின் நேயர்களுக்கும் அதிகாரங்களை அதிகரிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணத்தின் இரண்டு பெரிய நகரங்களுக்கு மேயர்களுக்கு வீட்டோ அதிகாரங்களை வழங்கும் யோசனை திட்டம் ஒன்று கடந்த வாரம் மாகாண சட்ட மன்றில் முன்வைக்கப்பட்டது.
மாகாணத்தை முன்னிலைப்படுத்தி அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு இந்த நடவடிக்கை சாதகமாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.