அஜாக்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் இந்த இரண்டு பேரும் காயமடைந்துள்ளனர்.
17 வயதான இளைஞர் ஒருவரும், 18 வயதான யுவதியொருவரும் இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த துப்பாக்கி சட்டவிரோதமானது எனவும் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளப்படாத துப்பாக்கி என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.