Home இந்தியா உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை மாணவி வெள்ளிப் பதக்கம்

உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை மாணவி வெள்ளிப் பதக்கம்

by Jey

ஜப்பானில் நடந்த உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை மாணவி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.ஜப்பான் நாட்டின் ஒகினாவா தீவில், 2வது உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் சமீபத்தில் நடந்தன.

இதில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர் – வீராங்கனையர் பங்கேற்று அசத்தினர்.இப்போட்டியில், இந்தியா சார்பில் சென்னை, செம்மஞ்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவி சிரோமிதா அருண் பங்கேற்றார்.

இவர், முதல் சுற்றில் 24 பேர்களில் நடத்தப்பட்ட போட்டியில் இருந்து, படிப்படியாக வென்று, காலியிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதி, மற்றும் அரையிறுதியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், ஜப்பான் வீராங்கனையுடன் மோதினார். இதில், 42 – 60, 40 – 75 என்ற புள்ளிக் கணக்கில் சிரோமிதா அருண் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

இரண்டாமிடம் பிடித்த அவருக்கு, வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. இந்தியா சார்பில் பங்கேற்று சாதனை படைத்து நாடு திரும்பிய மாணவிக்கு, செயின்ட் ஜோசப் கல்லுாரி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், கல்லுாரியின் நிறுவன தலைவர் பாபு மனோகரன் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகியோர் பாராட்டினர்.

related posts