Iஉலகில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்கள் பட்டியலில், டில்லி முதலிடத்திலும், கோல்கட்டா 2வது இடத்திலும் உள்ளது.
காற்றில் இருக்கும் தூசின்(பர்டிகுலேட் மேட்டர் -பிஎம்) அளவு 2.5 விட்டமாக உள்ளது. சுவாசிக்கக்கூடிய அளவுள்ள துகள்கள் 10 மைக்ரான்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதை பிஎம். 10(பிஎம்10) என அழைக்கப்படுகிறது. இது ஒரு கியூபிக் மீட்டருக்கு 20 மைக்ரோகிராம் அளவுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இந்நிலையில் ஹெல்த் எபக்ட்ஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் காற்று மாசுபாடு குறித்த நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்காக உலகம் முழுவதும் 7 ஆயிரம் நகரங்களின் காற்று மாசு அளவு சேகரிக்கப்பட்டது.
இந்த பட்டியில் டில்லி முதலிடத்திலும், கோல்கட்டா 2வது இடத்திலும் உள்ளது.நைஜீரியாவின் கனோ நகரம் 3வது இடத்தில் உள்ளது. 14வது இடத்தில் மும்பை உள்ளது.
4வது இடத்தில் பெருவின் லிமா, 5வது இடத்தில் வங்கதேசத்தின் டாகா, 6வது இடத்தில் இந்தோனேஷியாவன் ஜகார்த்தா, 7 வது இடத்தில் நைஜீரியாவின் லாகோஸ், 8 வது இடத்தில் பாகிஸ்தானின் கராச்சி, 9 வது இடத்தில் சீனா தலைநகர் பெய்ஜிங், 10வது இடத்தில் கானாவின் அக்ரா ஆகியன உள்ளன.
நைட்ரஜன் டை ஆக்சைடு வெளியிட்டு அளவை பொறுத்தவரையில் உலகின் சீனாவின் ஷாங்காய் நகரில் தான் அதிகமாக உள்ளது. இந்த பட்டியலில், முதல் 20 இடங்களில் இந்திய நகரங்கள் இல்லை. ஷாங்காய்க்கு அடுத்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோ உள்ளது.