ஐக்கிய நாடுகள் சபை ஊடாக குறித்த நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.
உணவு மற்றும் சுகாதார சேவைக்காக இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் 25 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிதியின் ஊடாக நாட்டிலுள்ளவர்களுக்கு வையான உணவு மற்றும் மருந்துகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கமைய, இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் இதுவரையில் அவுஸ்திரேலியா 75 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.