அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் எரிபொருள் தீர்ந்த சிறிய ரக விமானம் போக்குவரத்து மிகுந்த சாலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
“அட கிளம்பும்போதே இதெல்லாம் செக் பண்ண மாட்டீங்களாப்பா…” என்பது தான் பலரின் கேள்வியாக உள்ளது.
அதிலும், “எரிபொருள் தீர்ந்து விட்டால் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்க வேண்டியது தானே.
இப்படி நடு ரோட்டிலா விமானத்தை தரையிறக்குவது” என்ற சந்தேகமும் எழலாம். விமானத்தில் இருந்த ரேடியோ பழுதாகி இருந்ததால் தன்னால் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்த விமானி, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.