இலங்கையில் கலவரமான வன்முறை சம்பவங்கள் ஏற்படும் தினங்களில் நாடாளுமன்றத்தை எரியூட்டும் சதித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாிபதி இதனை கூறியதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்த உரிமை உண்டு – வன்முறைக்கு இடமில்லை
நாட்டில் நடந்த எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் ஏற்படும் வன்முறைகளின் போது நாடாளுமன்றத்தை எரியூட்டும் சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் சுதந்திரமாக ஒன்றுக்கூடி அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்த உரிமை இருந்த போதிலும் வன்முறையாக செயற்பட இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்,பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பந்துல குணவர்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.