கட்டணம் செலுத்தாது பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பொதுப் போக்குவரத்து சேவையான ரி.ரி.சீ இந்த விடயங்களை அறிவித்துள்ளது.
பொதுப் போக்குவரத்து சேவையில் கட்டணம் செலுத்தாது பயணம் செய்தால் அவர்களுக்கு எதிராக 425 டொலர்கள் வரையில் அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்தாது பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளினால் வருடாந்தம் 70 மில்லியன் டொலர் வருமான இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.