ஷிவ்நாத் எக்ஸ்பிரஸ் ரயில் கோண்டியா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இத்வாரி ரயில் நிலையம் நோக்கி சென்ற போது விபத்து ஏற்பட்டது. இதில் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.
மகாராஷ்டிராவிலிருந்து நாக்பூர் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சத்தீஷ்கரின் தோங்கர்கார் பகுதியில் திடீரென தடம் புரண்டது.
இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தென்கிழக்கு மத்திய ரயில்வே தெரிவித்து உள்ளது. மேலும், ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டதாகவும், எனவே, பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும், பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர் எனவும் ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, தடம் புரண்ட ரயிலை மீண்டும் இயக்குவதற்கான பணிகளை ரயில்வே தொழில் நுட்ப குழு மேற்கொணண்டது. இதற்காக மருத்துவ குழு ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது.