ஒன்றாரியோ மாகாணத்தில் நிலத்திலும் நீரிலும் இடம்பெற்ற விபத்துக்களினால் சுமார் 259 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டில் இவ்வாறு விபத்துக்களில் மரணங்கள் பதிவாகியுள்ளன.
நீர் நிலைகளிலும், வீதிகளிலும் ஏற்பட்ட விபத்துக்களில் இவ்வாறு உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டுடை விடவும் இந்த ஆண்டில் விபத்து மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் 19 மரணங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.