Home இந்தியா சாமானிய மக்களை சென்றடையும் வகையில் காப்பீடு திட்டம்

சாமானிய மக்களை சென்றடையும் வகையில் காப்பீடு திட்டம்

by Jey

காப்பீடு திட்ட பலன் சாமானிய மக்களையும் சென்றடையும் வகையில், அஞ்சலகங்களில் மிகக் குறைந்த பிரிமீயம் தொகையில், விபத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்கான வயது 18 முதல் 65-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் உள்ளிட்ட எந்த காகித பயன்பாடின்றி, வீடு தேடி தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், விரல் ரேகை பதிவு மூலம் 5 நிமிடத்தில் டிஜிட்டல் முறையில், பாலிசி திட்டத்தில் இணையலாம். விபத்தில் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம் போன்ற பாதிப்புக்கு ரூ.10 லட்சம் வரை விபத்து காப்பீடு பெறலாம்.

விபத்தில் உள்நோயாளி செலவுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரமும், புற நோயாளி செலவுக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரமும், விபத்தில் பாதிக்கப்பட்டவரின் 2 குழந்தைகள் கல்வி செலவுக்கு ரூ.1 லட்சம், மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் நாளுக்கு தினப் படியாக தலா ரூ.1000-ம் வீதம் 9 நாட்களுக்கு வழங்கப்படும்.

அஞ்சலகங்களை அணுகலாம் விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும், குடும்பத்தினரின் பயணச் செலவுக்கு ரூ.25 ஆயிரம், ஈம காரியம் செய்ய ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இத்தகைய பலன்களை பெற ஆண்டுக்கு ரூ.399 பிரிமீயம் செலுத்தினால் போதும்.

விபத்து காப்பீடு பாலிசி எடுப்பதன் மூலம் எதிர் பாராமல் நடக்கும் விபத்தால் பாதிப்பு, உயிரிழப்பு போன்ற சம்பவம் மூலம், குடும்பத்தில் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்பதால், அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி, இந்த காப்பீடு திட்டத்தில் இணைந்து பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

related posts