Home உலகம் உக்ரைனில் அமைதியான முறையில் சுதந்திர தினம்

உக்ரைனில் அமைதியான முறையில் சுதந்திர தினம்

by Jey

கீவ்-ரஷ்யா போர் துவங்கி, ஆறு மாதங்கள் முடிந்து உள்ள நிலையில், நாட்டின் சுதந்திர தினத்தை உக்ரைன் மக்கள் அமைதியான முறையில் வீடுகளில் கொண்டாடினர்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்து உள்ளது. பிப்., 24ம் தேதி ரஷ்யப் படைகளின் தாக்குதல் துவங்கியது. போர் துவங்கி, நேற்றுடன் ஆறு மாதங்கள் முடிகின்றன.இந்நிலையில், உக்ரைனின் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கடந்த 1991ல் சோவியத் யூனியனில் இருந்து தனியாகப் பிரிந்தது உக்ரைன்.

இதையடுத்து, ஆக., 24ம் தேதி சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மூளையாகக் கருதப்படும் அவருடைய நெருங்கிய கூட்டாளி அலெக்சாண்டர் துகினின் மகள், மாஸ்கோவில் சமீபத்தில் கொல்லப்பட்டார்.

இதற்கு உக்ரைனே காரணம் என்று கூறி வரும் ரஷ்யா, போரை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து, உக்ரைன் மக்கள் சுதந்திர தினத்தை வீடுகளிலேயே கொண்டாடினர்.

related posts