Home உலகம் தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒரு அங்கமாக கருத்துகிறது

தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒரு அங்கமாக கருத்துகிறது

by Jey

தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு தைவான். ஆனால், தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒரு அங்கமாக கருத்துகிறது. தேவை ஏற்படும் சூழ்நிலையில் தைவான் மீது படையெடுத்து தங்கள் நாட்டுடன் சேர்த்துக்கொள்வோம் என சீனா எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இதனிடையே, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசி கடந்த 2-ம் தேதி அரசு முறை பயணமாக இரவு தைவானுக்கு சென்றார். அவர் தைவான் அதிபரை சந்தித்து பேசினார். நான்சி பொலேசியின் இந்த பயணம் சீனாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான்சி பொலேசியின் பயணத்தை தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் 3 முறை தைவானுக்கு சென்றனர். இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற பெண் எம்.பி. மார்ஷா பிளாக்பெர்ன் தைவான் நாட்டிற்கு சென்றுள்ளார்.

அவர் நேற்று இரவு தைவான் நாட்டிற்கு சென்றார். இதன் மூலம் இந்த மாதத்தில் தைவானுக்கு அமெரிக்க அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் 4-வது பயணம் இதுவாகும்.

தைவானுக்கு சென்றது தொடர்பாக எம்.பி. மார்ஷா பிளாக்பெர்ன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிஜீங்கிற்கு செய்தி அனுப்ப நான் தற்போது தைவானில் தரையிறங்கியுள்ளேன். எங்களை அச்சுறுத்தமுடியாது’ என தெரிவித்துள்ளார்.

related posts