அறிமுகமான நபரிடம் 2 வயதான மகனை கொடுத்து விட்டு தப்பிச் சென்ற பெண்ணை இன்று காலை கைது செய்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி உடுகமையை சேர்ந்த பெண்
காலி உடுகமை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுனேத் சாந்தவின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் குழு ஒன்று விசாரணைகளை நடத்தியதுடன் பெண் அவரது வீட்டில் இருந்த நிலையில் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளதுடன், அவருக்கு பிள்ளைகள் இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
11 ஆண்டுகள் சவுதி அரேபியாவில் தொழில் புரிந்து விட்டு கடந்த 25 ஆம் திகதி நாடு திரும்பிய களுத்துறை போதியவத்தை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை நடத்திய பொலிஸார் பெண்ணை கைது செய்துள்ளனர்.
இந்த நபர் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிக்கொண்டிருந்த போது விமானத்தில் 2 வயது பிள்ளையுடன் சந்தேக நபரான பெண் அறிமுகமாகியுள்ளார்.