ஒன்றாறியோ மாகாணத்தின் ஹோக்வில் பகுதியில் அமைந்துள்ள ஒன்றாறியோ குளத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இளம் பெண் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
சிலர் நீரில் மூழ்கி தத்தளிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த தகவலை தொடர்ந்து குறித்த இடத்திற்கு போலீசார் விரைந்திருந்தனர்.
இதன்போது குறித்த இளம் யுவதி நீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருப்பதனை அவதானித்த போலீசார் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அடுத்து மற்றும் ஒரு சிறுவன் இந்த குளத்தில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவனுக்கு எவ்வித பாதிப்புகளும் கிடையாது என தெரிவிக்கின்றனர்.
எவ்வாறெனினும் குறித்த யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஹால்டன் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.