ரஷிய அதிபர் புதின் தனது படையில் 1.30 லட்சம் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சமீபத்திய முயற்சியில், அவர் வெற்றி பெறுவார் என அமெரிக்க அரசு கருதவில்லை.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்கும் முன்பே, ரஷிய படை வீரர்களின் எண்ணிக்கைக்கான இலக்கை அவர்கள் அடையவில்லை. அப்போதே அவர்களிடம் 1.50 லட்சம் வீரர்கள் பற்றாக்குறையாக இருந்தனர்.
அதனால், புதிய வீரர்களை சேர்ப்பதில் அதிகபட்ச வயது தளர்வு நீக்கம், கைதிகளை பணியில் சேர்ப்பது உள்ளிட்ட ஆள்சேர்ப்பு பணியை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த புதிய ஆள்சேர்ப்பில் உள்ளவர்களில் பலர் வயது முதிர்ந்த, வேலைக்கு தகுதியற்ற மற்றும் சரியான பயிற்சி அளிக்கப்படாதவர்களாகவே காணப்படுகின்றனர்.
அதனால், இவை எல்லாவற்றிலும் இருந்து எங்களுக்கு தெரிய வருவது என்னவென்றால், கூடுதல் வீரர்களை ஆண்டு இறுதிக்குள் சேர்ப்பது என்ற ரஷியாவின் இலக்கு பூர்த்தியடையாது என கூறியுள்ளார்.
அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினரும், சொந்தங்களும் தவித்து வருகின்றனர். அந்நாட்டின் கல்வி நிலையங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் உருக்குலைந்து போயுள்ளன.
தொடக்கத்தில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது. உக்ரைன் போரில், பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சிறுமிகள், பெண்களுக்கு ரஷிய வீரர்களால் பாலியல் வன்கொடுமைகளும் நிகழ்த்தப்படுகின்றன என அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த போரால், பெரியவர்களை விட சிறுவர், சிறுமிகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர் என ஐ.நா.வின் சர்வதேச குழந்தைகளுக்கான அவசரகால நிதி அமைப்பு (யுனிசெப்) வேதனை தெரிவித்து உள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போருக்கு இடையே, ரஷிய படையில் 1.37 லட்சம் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிபர் புதின் உத்தரவிட்டு உள்ளார்.
வேலையை தொடங்கிய அமெரிக்கா இதனால், படை வீரர்களின் மொத்த எண்ணிக்கை 11.5 லட்சம் என்ற அளவில் உயரும்.
இதுதவிர, சில கைதிகளை கூட ராணுவ பணியின் ஒரு பகுதியாக படையில் சேர வரும்படி அழைப்பு விடப்பட்டு உள்ளது என ரஷிய ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. இதுபற்றி அமெரிக்க பாதுகாப்பு துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, உக்ரைனுக்கு எதிரான போரில் வீரர்களை கண்டறிய ரஷியா போராடி வருகிறது.