Home இந்தியா 3.20 கோடி மின் இணைப்புகளுக்கும் வினியோகம் செய்யும் பணி

3.20 கோடி மின் இணைப்புகளுக்கும் வினியோகம் செய்யும் பணி

by Jey

அனைத்து மாநில மின் வினியோக நிறுவனங்களின் செயல்பாடு தொடர்பாக, மத்திய மின் துறை வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், தமிழக மின் வாரியம், 46வது இடத்தை பிடித்துள்ளது.

தமிழக மின் வாரியம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்களாக செயல்படுகிறது.

அதில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம், 3.20 கோடி மின் இணைப்புகளுக்கும் வினியோகம் செய்யும் பணியை மேற்கொள்கிறது. ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டு, மூன்று மின் பகிர்மான நிறுவனங்கள் செயல்படுகின்றன.

மத்திய மின் துறை, நாடு முழுதும் செயல்படும், 52 அரசு துறை மின் வினியோக நிறுவனங்களின் நிதி நிலைமை, மின் வினியோக செயல்பாடு போன்றவற்றை ஆராய்ந்து, ஆண்டுதோறும் தரவரிசை பட்டியல் வெளியிடுகிறது.

கடந்த, 2019 – 20ல் வெளியிட்ட பட்டியலில், தமிழக மின் வாரியம், 40வது இடத்தை பிடித்திருந்தது. தற்போது, 2020 – 21ம் நிதியாண்டிற்கான பட்டியலில் ‘சி மைனஸ் கிரேடு’ உடன், 46வது இடத்தை பிடித்துள்ளது.

அந்த ஆண்டில் மின் வாரியம், 49 ஆயிரத்து, 785 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ள நிலையில், 13 ஆயிரத்து, 407 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.ஒரு யூனிட் மின்சார விற்பனைக்கும்,

அதனால் கிடைக்கும் வருவாய்க்கும் உள்ள இடைவெளி, 2 ரூபாய் என்ற அளவில் உள்ளது. மின் கொள்முதல் போன்றவற்றுக்கு அதிக செலவு செய்வதே தரவரிசை பட்டியலில் மிகவும் மோசமான நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

தரவரிசை பட்டியலில், குஜராத்தை சேர்ந்த நான்கு மின் வினியோக நிறுவனங்கள் முதலாவது, இரண்டாவது, நான்காவது, ஐந்தாவது இடத்தில் உள்ளன.

related posts