Home கனடா கனடாவில் மொடர்னா புதிய தடுப்பூசிக்கு அனுமதி

கனடாவில் மொடர்னா புதிய தடுப்பூசிக்கு அனுமதி

by Jey

கனடாவில் மொடர்னா புதிய தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்றின் புதிய திரிபுகளை இந்த தடுப்பூசி தடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது உலகின் பல பகுதிகளிலும் கோவிட் பெருந்தொற்றின் திரிபான ஒமிக்ரோன் மற்றம் அதன் உப திரிபுகள் கூடுதல் தாக்கத்தை செலுத்தி வருகின்றன.

இந்த திரிபுகளை முழுமையாக கட்டுப்படுத்தக் கூடிய ஓர் தடுப்பூசியாக மொடர்னாவின் தடுப்பூசி கருதப்படுகின்றது.

கனடாவின் சுகாதார திணைக்களம் இந்த தடுப்பூசிக்கான அனுமதியை வழங்கியுள்ளது.

எதிர்வரும் நாட்களில் இந்த தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்காக தங்களை முன்பதிவு செய்து கொள்வது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

புதிய தடுப்பசியை ஏற்றிக் கொள்வதன் மூலம் மீணடும் ஒரு அலை ஏற்படுவதனை தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

related posts