Home இலங்கை பாரிஸில் இருந்து சட்டவிரோதமான முறையில் நகைகளை எடுத்துச் சென்ற இலங்கையர் கைது

பாரிஸில் இருந்து சட்டவிரோதமான முறையில் நகைகளை எடுத்துச் சென்ற இலங்கையர் கைது

by Jey

சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை சட்டவிரோதமான முறையில் எடுத்துச் சென்ற இலங்கை பிறப்பிடமாக கொண்ட பயணியே அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் சுங்க அதிகாரிகள் குழுவொன்று நடத்திய சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரிஸில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL-564 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார். கைது செய்யப்பட்டவர் சுமார் 10 வருடங்கள் பிரான்ஸில் பணிபுரிந்துவிட்டு நாடு திரும்பியவராகும்.

அவர் கொழும்பு மாலபேயில் வசிக்கும் 38 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்த போது, ​​அவர் விமான நிலையத்தை விட்டு வேறு வழியாக வெளியேற முயன்றுள்ளார். இதன் போதே இந்த பயணி சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என தெரியந்துள்ளது.

சுமார் 2 கிலோ 414 கிராம் எடையுள்ள நகைகளில் கழுத்தில் 586.8 கிராம் எடையுள்ள நெக்லஸ் அணிந்திருந்ததாகவும், மற்ற நகைகள் தனது பயணப் பையில் மிக நுணுக்கமாக மறைத்து வைத்திருந்ததாகவும் அவரை கைது செய்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

related posts