Home இலங்கை மிகவும் மோசமான வீழ்ச்சி பதிவு இலங்கை ரூபாவின் பெறுமதி – ஹர்ஷ டி சில்வா

மிகவும் மோசமான வீழ்ச்சி பதிவு இலங்கை ரூபாவின் பெறுமதி – ஹர்ஷ டி சில்வா

by Jey

2021ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதல் 2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் வரையிலான ஒரு வருடத்தில் ஒரு லட்சம் ரூபாயின் பெறுமதி 30,000 ரூபாயாக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ரூபாவின் பெறுமதி மிகவும் மோசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை அறிவித்தாலும் அதற்கு எதிரான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அதனை நடைமுறைப்படுத்த இடமளிக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வற் வரியை 3 வீதமாக அதிகரிக்கும் ஜனாதிபதியின் யோசனைக்கு நீங்கள் உடன்படவில்லை என்றால் வரவு செலவுத் திட்ட இடைவெளியைக் குறைப்பதற்கு அரசாங்க வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது என எதிர்க்கட்சியினரிடம் சுசில் பிரேமஜயந்த கேள்வி எழுப்பினார்.இதன் பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

related posts