ஒமிக்கிறான் பூஸ்டர் தடுப்பூசி எதிர்வரும் வாரத்தில் மாகாணத்திற்கு கிடைக்கப்பெறும் என ஒன்றாறியோ மகன சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒமிக்கிறோன் மற்றும் அதனுடன் தொடர்புடைய உப திரிபுகளை கட்டுப்படுத்தக்கூடிய புதிய கோவிட் தடுப்பூசி ஒன்றிற்கு கனடிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி வழங்கியது.
மொடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு இந்த தடுப்பூசியை ஏற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் சில்வியா ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக ஆபத்துக்களை எதிர்நோக்க கூடிய நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் அளவிற்கு ஏற்ற வகையில் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை விரிவு படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் ஜான்ஸ் சுட்டிக் காட்டியுள்ளார்