Home உலகம் அமெரிக்கவில் 50 ஆண்டுகளாக குடியரசு கட்சியின் வசம் இருந்த அலாஸ்கா…..?

அமெரிக்கவில் 50 ஆண்டுகளாக குடியரசு கட்சியின் வசம் இருந்த அலாஸ்கா…..?

by Jey

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையில் அலாஸ்கா மாகாணத்தில் இருந்து எம்.பி.யாக இருந்து வந்த டான் யெங் கடந்த மார்ச் மாதம் மரணம் அடைந்தார். இதனால் அங்கு கடந்த 16-ந்திகதி இடைத்தேர்தல் நடந்தது.
அதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் மேரி பெல்டோலாவும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான பெண் தலைவர் சாரா பாலினும் போட்டியிட்டார். இவர் அலாஸ்கா மாகாணத்தின் கவர்னராக இருந்தவர்.

2008-ம் ஆண்டு துணை ஜனாதிபதி பதவிக்கு ஜான் மெக்கைனுக்கு எதிராக குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டவர் ஆவார். எனவே இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவியது. பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு நேற்று முன்தினம் முடிவு அறிவிக்கப்பட்டது.

இதில் சாராபாலின் தோல்வியைத் தழுவினார். இதனால் கடந்த 50 ஆண்டுகளாக குடியரசு கட்சியின் வசம் இருந்த அலாஸ்கா மாகாண மாவட்டம், இப்போது ஜனநாயக கட்சி வசம் வந்துள்ளது. இந்த தேர்தலில் அந்தக் கட்சியின் வேட்பாளர் மேரி பெல்டோலா (வயதுரு 49) வெற்றி பெற்றிருக்கிறார்.

இவர் மாகாண சட்டசபை உறுப்பினராக இருந்தவர். இந்த தோல்வி சாரா பாலினுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஆனால் வெற்றி பெற்றுள்ள மேரி பெல்டோலா, நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் அலாஸ்காவை சொந்த மாகாணமாக கொண்ட முதல் எம்.பி. என்ற சிறப்பை பெறுவார். அதே நேரத்தில் இவரது பதவிக்காலம் நவம்பர் வரையில்தான். நவம்பர் 8-ந் திகதி அமெரிக்காவில் பொதுத்தேர்தல் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

related posts