டொரன்டோ நகரில் வீடுகளின் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளதாக பிராந்திய ரியல் எஸ்டேட் சபை அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வீட்டு விற்பனையானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 34 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது.
எனினும் கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 15 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டில் 5627 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 8549 வீடுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அடகு மற்றும் வட்டி வீதங்களின் அதிகரிப்பு காரணமாக வீடுகளின் விற்பனை சரிவை சந்தித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.