மார்க்கம் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டதில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ரேசர் வீதி மற்றும் 14த் அவென்யூ ஆகிய வீதிகளுக்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வேன் வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஓன்றும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், எனினும் சிகிச்சைகள் பலனின்றி அவர் வைத்தியசாலையில் உயிரிழந்து விட்டார்.
இந்த விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை சம்பவம் தொடர்பில் யோக் பிராந்திய போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.