கனடாவில் அடுத்த வாரம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.
கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக பாடசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்படுமா என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரத்தில் இரண்டு மில்லியன் மாணவர்கள் பாடசாலைகளுக்கு திரும்ப உள்ளனர்.
ஏற்கனவே முகக் கவசம் அணிவது கட்டாயமில்லைல என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஓர் அலை ஏற்படக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் வகுப்பறை கற்கைகளை ஆரம்பிப்பது கனேடிய மருத்துவத்துறைக்கு மேலும் வேலைப்பளுவினை அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.