அமெரிக்காவில் நிலவி வரும் வெப்ப அலையானது கனடாவை பாதிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் மேற்கு பிராந்தியத்தினை அமெரிக்காவின் வெப்ப குவிமாடம் பாதிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஸ்ட ஆய்வாளர் டேவிட் பிலிப்ஸ் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு அமெரிக்கா முழுவதிலும் இந்த வெப்ப குவிமாடத்தின் பாதிப்புக்களை உணர முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வெப்ப குவிமாடம் ஆபத்தானது எனவும் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்க கூடியது எனவும் தெரிவித்துள்ளார்.
`