Home கனடா ஈ-சைக்கிள் விபத்தில் நபர் ஒருவர் பலி

ஈ-சைக்கிள் விபத்தில் நபர் ஒருவர் பலி

by Jey

கனடாவின் நோர்த் யோர்க் பிராந்தியத்தில் இடம்பெற்ற ஈ-சைக்கிள் விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேன் ஒன்றும் – ஈ-சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

சுமார் 40 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

வில்சன் அவன்யூ, பார்க்வீதி மற்றும் கெலீ வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிக்கிய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

related posts