அமெரிக்காவில் உள்ள பிரபல வால்மார்ட் அங்காடியை விமானம் மூலம் தகர்க்கப்போவதாக விமானி ஒருவர் மிரட்டல் விடுத்தார்.
அமெரிக்காவின் மிஸ்ஸிப்பி மாகாணம் டுபேலா நகரில் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் பல்பொருள் அங்காடி உள்ளது.
இதனை விமானம் மூலம் தகர்க்கப்போவதாக மிரட்டல் விடுத்த 29 வயது வாலிபரான விமானி , விமானத்தில் சுற்றினார். அவருடன் டுபேலா நகர போலீசார் பேசினர்.
முன்னெச்சரிக்கையாக அங்காடியில் இருந்து வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.அந்த வாலிபர் விமானத்தை திருடிச்சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
நிலைமை சீராகும் வரை அங்காடியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தினர். மிரட்டலுக்கான காரணம் தெரியவில்லை.
அதன் பின்னர் விமானம் குறித்த முழுமையாக தகவலும் இல்லை.