Home உலகம் கடும் தாக்குதலில், காயமடைந்து உயிரிழந்த மூத்த பத்திரிகையாளர்

கடும் தாக்குதலில், காயமடைந்து உயிரிழந்த மூத்த பத்திரிகையாளர்

by Jey

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் வசித்து வந்த மூத்த பத்திரிகையாளர் ஜெப் ஜெர்மன் (வயது 69). புலனாய்வு செய்திகளை எழுதுவதில் திறன் படைத்தவரான இவர் தனது வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடந்து உள்ளார்.

இதனை கவனித்த அருகே வசித்த மற்றொரு நபர் போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உள்ளார். இதனை தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி லாஸ் வேகாஸ் காவல் துறையை சேர்ந்த உயரதிகாரி தோரி கோரென் கூறும்போது, ஜெர்மனுக்கும், மற்றொரு நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்தே, மோதல் ஏற்பட்டு அவர் கொல்லப்பட்டு உள்ளார் என கூறியுள்ளார்.

தரமுள்ள செய்திகளை தருவதில் சிறந்தவர் என ஜெர்மனுக்கு உயரதிகாரியாக உள்ள கிளென் குக் கூறியுள்ளார். தனது பாதுகாப்புக்கு ஆபத்து என்ற எந்தவொரு தகவலையும் ஜெர்மன், செய்தி நிறுவன தலைமையிடம் தெரிவிக்கவில்லை என்றும் குக் கூறியுள்ளார்.

சி.பி.சி. நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், பத்திரிகையாளர்கள் பலர் இந்த ஆண்டில் படுகொலை செய்யப்பட்டு உள்ள விவரம் வெளிவந்து உள்ளது.

இதற்கு முன் மெக்சிகோவில், எல்லைப்புற நகரான சான் லூயிஸ் ரியோ கொலராடோவின் ஒரு பகுதியில் ஜுவான் அர்ஜோன் லோபஸ் என்ற பத்திரிகையாளரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கடும் தாக்குதலில், காயமடைந்து உயிரிழந்து உள்ளார். கடந்த ஆகஸ்டு மாதத்தில் மத்திய மெக்சிகோவில் மதுபான பார் ஒன்றில் எர்னெஸ்டோ மெண்டிஸ் என்ற பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.

related posts