சஸ்கட்ச்வானில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்களுக்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இரங்கல் வெளியிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் மிகவும் வேதனையளிப்பதாகவும் கொடூரமான தாக்குதல் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்காக வேதனைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு பிரதமர் ட்ரூடோ கோரியுள்ளார்.
இதேவேளை, தாக்குதல் சம்பவத்திற்கு சஸ்கட்ச்வான் முதல்வர் ஸ்கோட் மோயிலும் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் 15 பேர் காயமடைந்தனர்.