ராஜபக்சர்களை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெற்றுக் கொண்ட அரச முறை கடன்களை மீள செலுத்த முடியாது என இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்ததால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாக பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்திய பசில் தரப்பினர் குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ராஜபக்சர்களின் முறையற்ற அபிவிருத்தி, வரையறையற்ற வெளிநாட்டு அரசமுறை கடன்களினால் நாடு நிச்சயம் வங்குரோத்து நிலைமை அடையும் என்பதை குறிப்பிட்டதால் 2013ஆம் ஆண்டு அமைச்சு பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.