றொரன்டோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
றொரன்டோவின் 401 அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் முன்னாள் பயணித்த வாகனமொன்றின் மீது மோதுண்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய பெண் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் ஏனைய வாகனத்தின் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து காரணமாக வீதி சில மணித்தியாலங்களுக்கு மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.