Home இந்தியா ரூ.330 கோடியில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் – மு.க.ஸ்டாலின்

ரூ.330 கோடியில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் – மு.க.ஸ்டாலின்

by Jey

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். அதன்படி நாளை நெல்லைக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட வ.உ.சி. மைதானம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.

மேலும் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைக்கிறார். விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள் இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கார் மூலம் கன்னியாகுமரி சென்ற அவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாதயாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று அவருக்கு தேசிய கொடி வழங்கி யாத்திரையை தொடங்கி வைக்கிறார்.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறார் நாளை காலை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.ரூ.330 கோடியில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

நெல்லை மாநகராட்சி சார்பில் இதுவரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முடிவடைந்துள்ள 5 பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார்.

related posts