இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து போரிஸ் ஜான்சன் ஆட்சியின் போது உள்துறை மந்திரியாக பணியாற்றிவந்த இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரித்தி படேல் தனது பதவியை ராஜினாமா நேற்று செய்தார்.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் புதிய உள்துறை மந்திரியாக சூலா பிரேவர்மென் (வயது 42) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளி பெண் ஆவார். சூலா பிரேவர்மெனின் தாய் உமா. இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவர் 1960-ம் ஆண்டு வாக்கில் இங்கிலாந்தில் குடியேறினார்.
உமா இங்கிலாந்தில் குடியேறிய கென்யாவை சேர்ந்த கிரிஸ்டி பெர்னாண்டஸ் என்ற நபரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் சூலா. சூலா 2018-ம் ஆண்டு ரெயல் பிரேவர்மென் என்ற நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. பர்ஹம் தொகுதி எம்.பி.யான சூலா பிரேவர்மென் இங்கிலாந்து அரசு வழக்கறிஞராக செயல்பட்டு வந்தார்.