Home இலங்கை ஏன் 37 ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்?

ஏன் 37 ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்?

by Jey

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்கள் எவ்வித சலுகைகளும் இன்றி செயற்படுவார்கள் என அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கீழ் 20 அமைச்சர்கள் மாத்திரம் நியமிக்கப்பட்டுள்ளதால் அனைத்து அரச நிறுவனங்களையும் செயற்படுத்த போதுமானதாக இல்லை என அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தம் கீழ் உள்ள 35 நிறுவனங்களை உதாரணமாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அனைத்து நிறுவனங்களின் விவகாரங்களையும் தாம் மட்டும் கையாள்வது கடினம் என்றார்.

எனவே இராஜாங்க அமைச்சர் ஒருவரை நியமித்தால் அந்த நிறுவனங்கள் தொடர்பான விவகாரங்களை அவர்களுக்கே வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

related posts