சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனத்தின் தலைவரும் அமெரிக்க இராஜதந்திரியுமான (USAID) நிர்வாகி சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
அதன்படி அடுத்த வார இறுதியில் இந்த நாட்டுக்கு வரவுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வரும் அவர் இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கவுள்ளதுடன், அரசாங்கத்தின் பிரதிநிதிகளையும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.