ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கைக்கு பெருந்தொகை அவசர உதவி கடனை வழங்கப்படவுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் நேற்று ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்யவும் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் இந்த உதவி வழங்கப்படவுள்ளது.
இதற்கமைய, ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கைக்கு 203 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசர உதவி கடனை வழங்குகிறது.
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து அவசரகால கடன் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் போது, ஆசியா மற்றும் பசுபிக் நிதியம், திட்ட நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காக 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது.