Home இலங்கை அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் பிரதிவாதியாக கோட்டாபய ராஜபக்ச

அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் பிரதிவாதியாக கோட்டாபய ராஜபக்ச

by Jey

திருகோணமலை எண்ணெய் தாங்கிப் பண்ணை ஒப்பந்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சீனக்குடா எண்ணெய் தாங்கி பண்ணையை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்காக லங்கா ஐஓசி நிறுவனத்துடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள அதிகாரம் வழங்கிய அமைச்சரவை பத்திரத்தின் சட்டபூர்வமான தன்மையை சவால் செய்து இந்த மனுக்களை எல்லே குணவன்ச தேரர், பெங்கமுவே நாலக மற்றும் வக்முல்லே உதித்த தேரர் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தர்ஷன வெரதுவகே, மனுக்களில் திருத்தத்திற்கு நீதிமன்றத்தின் அனுமதியை கோரினார்.

related posts