Home உலகம் பிரிட்டன் வரலாற்றில் அதிக வயதில் மன்னரான சார்லஸ்

பிரிட்டன் வரலாற்றில் அதிக வயதில் மன்னரான சார்லஸ்

by Jey

இரண்டாம் எலிசபெத் மறைவுக்குப் பின், பிரிட்டனின் அடுத்த மன்னராக அவரது மூத்த மகன் மூன்றாம் சார்லஸ், 73, பதவியேற்கிறார். பிரிட்டன் வரலாற்றில் அதிக வயதில் மன்னராவது இவர் தான். இதற்கு முன், நான்காம் வில்லியம்ஸ் 1830ல் தன் 64 வயதில் மன்னராக முடிசூடியிருந்தார்.சார்லசின் பின்னணி:

1948 நவ., 14: சார்லஸ் லண்டன் பக்கிங்ஹாம் அரண்மணையில் பிறந்தார். இவர், மன்னர் பிலிப் – ராணி இரண்டாம் எலிசபெத் தம்பதியின் மூத்த மகன்  இளம் வயதில் ‘போலோ’ விளையாட்டில் பங்கேற்றார். பல முறை குதிரையில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தார்  கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் எம்.ஏ., படிப்பை முடித்தார். அரச குடும்பத்தில் இருந்து முதன்முறையாக பல்கலைக்கு சென்று படித்தார்.

இதற்கு முன், அரச குடும்பத்தினர் வீட்டிலேயே கல்வி கற்றனர்  1968: வேல்ஸ் இளவரசரானார்  1971 – 1976: பிரிட்டன் விமானப்படை, கப்பல்படையில் பணியாற்றினார் 1976: ‘தி பிரின்ஸ் டிரஸ்ட்’ என்ற தொண்டு நிறுவனத்தை துவங்கினார். இது, ஆதரவற்ற இளைஞர்கள் கல்வி பயில்வதற்கு உதவுகிறது  1977: முதன்முறையாக டயானாவை சந்தித்தார்  1981: டயானாவை திருமணம் செய்தார்  1982 ஜூன் 21: வில்லியம்ஸ் பிறந்தார்.

அடுத்து இவர் தான் மன்னர் ஆவார்  1984 செப்., 15: ஹாரி பிறந்தார்  1996: டயானாவுடன் விவாகரத்து ஆனது  1997 ஆக., 31: கார் விபத்தில் டயானா உயிரிழந்தார்  2005: கமீலாவை திருமணம் செய்தார்  2018: சார்லசை, 54 நாடுகளைச் சேர்ந்த காமன்வெல்த் நாடுகளின் தலைவராக, ராணி இரண்டாம் எலிசபெத் நியமித்தார்  பல புத்தகங்களை எழுதியுள்ளார்  அரச குடும்பத்தின் பல்வேறு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தினார்.

 பிரிட்டன் தவிர ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து உட்பட 15 காமன்வெல்த் நாடுகளின் மன்னராகவும் இருப்பார்  பருவநிலை மாற்றத்தை தடுக்கும் விதமாக பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவித்தார். பிரிட்டன் அரச குடும்பத்துக்கு சொந்தமான ‘டச் ஆப் கார்னிவல்’ எஸ்டேட்டின் மேனேஜராக இருந்த இவர், அங்கு பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவித்தார்;இதற்காக விருதுகளையும் பெற்றுள்ளார்  ஓமியோபதி உள்ளிட்ட மாற்று மருத்துவத்தை ஆதரித்தார்.

 

 

related posts