Home இலங்கை விவசாய அமைச்சர் கிளிநொச்சிக்கான விஜயம்

விவசாய அமைச்சர் கிளிநொச்சிக்கான விஜயம்

by Jey

விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர நேற்றைய தினம் கிளிநொச்சிக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

முதலாவதாக பூநகரிப் பிரதேசத்தில் உள்ள தெளிகரை குளம் மற்றும் ஈநொச்சி குளத்தை புனரமைக்கும் வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த இரண்டு குளங்களும் உலக வங்கியின் 68.59 மில்லியன் ரூபா செலவில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது.

மாவட்டத்தில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் கீழ் உலக வங்கியின் நிதியுதவியில் 33 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன.

குறித்த நிகழ்வில் புனரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைத்த அமைச்சர் குறித்த பகுதி விவசாயிகளோடு கலந்துரையாடிருந்தார்.

விவசாயத்திற்கு பசளையும் மண்ணண்ணெய் தேவை, வயலுக்கும், சோளத்திற்கும், மேட்டு நிலத்திற்கும் கட்டாயம் பசளை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மண்ணண்ணெய் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர் கிளிநொச்சி திருவையாறு பகுதியில் ஐம்போ நிலக்கடலை செய்கை பண்ணப்படும் விவசாய நிலத்தை பார்வையிட்டார்.

மூன்றாவதாக இரணைமடு சந்தியிலுள்ள பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு குறித்த நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் உற்பத்திகளை பார்வையிட்டார்.

related posts