மிஸ்ஸிசாகுவாவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
48 வயதான றொரன்டோ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் கொல்லப்பட்டதுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
றொரன்டோ பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வந்த அன்ட்றூ ஹோங் என்பவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்ட நபரை பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடாத்தி கைது செய்துள்ளனர்.
எவ்வாறெனினும் சந்தேக நபரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
ஹமில்டனில் வைத்து குறித்த சந்தேக நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்னர்.